தமிழ்நாடு

சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும்- பதிவுத்துறை உத்தரவு

Published On 2023-09-15 10:09 GMT   |   Update On 2023-09-15 10:09 GMT
  • புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல்.
  • கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு.

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும்.

இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News