தமிழ்நாடு
மேலப்பாளையத்தில் சோதனை நடந்த ஒரு வீடு முன்பு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்- மேலப்பாளையத்தில் 4 வீடுகளில் போலீசார் சோதனை

Published On 2022-11-01 07:13 GMT   |   Update On 2022-11-01 09:55 GMT
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  • முகமது இப்ராகிமிடம் ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

நெல்லை:

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் சிலரை ரகசிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்குள்ள காதர் மூப்பன் தெருவில் சாகிப் முகமது அலி, செய்யது முகமது புகாரி, முகமது அலி, முகமது இப்ராகிம் ஆகிய 4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று காலை 8 மணி முதல் நடந்த இந்த சோதனையையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அதில் முகமது இப்ராகிமிடம் ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அவரது வீடு உள்பட 4 வீடுகளில் காலையில் தொடங்கிய சோதனை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இதில் எந்த விதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News