தமிழ்நாடு (Tamil Nadu)

போதையில் தவறாக பேசிவிட்டேன்.. சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை பகிர்ந்த போலீஸ்

Published On 2024-10-21 14:15 GMT   |   Update On 2024-10-21 14:15 GMT
  • லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
  • கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.

போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் தலைமறைவானார்கள் .

போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் என்பவர் மன்னிப்புக் கேட்ட வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், "20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News