தமிழ்நாடு

புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சவுந்தர்யா மரணம்

Published On 2024-07-26 16:47 GMT   |   Update On 2024-07-26 16:47 GMT
  • தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
  • சவுந்தர்யா மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல்.

தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார்.

இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக

முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News