தமிழ்நாடு

காவிரி தண்ணீரை தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

Published On 2024-07-28 09:13 GMT   |   Update On 2024-07-28 09:13 GMT
  • இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
  • இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கேட்டபோது கொடுக்காத கர்நாடகா, தானாக முன்வந்து அணைகளை திறந்து தண்ணீரை தந்துள்ளது.

இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீரை தினந்தோறும் தமிழகத்திற்கு தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் தர மறுத்தபோது, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில், தமிழக அரசு இனிமேலாவது இயற்கை அன்னை நமக்கு கொடையாக வழங்கி வரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பாராமல் தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீருக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Tags:    

Similar News