தமிழ்நாடு

திருக்கோவிலூர் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்து- 5 மாணவர்கள் படுகாயம்

Published On 2024-08-05 08:36 GMT   |   Update On 2024-08-05 08:36 GMT
  • மாணவர்களை ஏற்றி வர கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எறையூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஏற்றி வர கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி இக்கல்லூரிக்கு சொந்தமான பஸ், எம்.தாங்கலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்டது. இந்த பஸ் அதே ஊரில் உள்ள வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் சாலையோர பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 மாணவர்கள், 2 மாணவிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த மாணவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை உருவாக்கியது.

Tags:    

Similar News