வரும் 16ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்
- நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.
- அரபிக்கடல், வங்க கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்யும்.
தமிழகத்தின் வானிலை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தஞ்சை, திருவாரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.
15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.
16ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டில் கனமழை பெய்யும்.
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரித்து 15,16 தேதிகளில் அதிகனமழை பெய்யும்.
முன்னதாக, அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 95.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.
அரபிக்கடல், வங்க கடலில் உள்ள 2 நிகழ்வுகளால் கனமழை பெய்யும்.
மழை தொடர்பான அனைத்து தகவல்களும் அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழை தொடர்பான அரசு அதிகாரிகளுடன், தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.
இயல்பான காலத்தில் பருவ மழை தொடங்குகிறது. அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்.
கன மழை, மிக கனமழை, அதிகனமழை என்று தான் கூறமுடியும். எவ்வளவு செ.மீ மழை பெய்யும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கூறும் அளவுக்கு அறிவியல் வளரவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.