தமிழ்நாடு

சென்னையில் நாளை ஆர்.எம்.வீரப்பன் 98-வது பிறந்தநாள் விழா

Published On 2023-09-08 08:52 GMT   |   Update On 2023-09-08 08:52 GMT
  • எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள் விழா நாளை சென்னையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
  • ஆர்.எம்.வீரப்பன் மக்கள் நற்பணி மன்ற பொருளாளர் அண்ணாதுரை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை:

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள் விழா சென்னையில் நாளை கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர். கழக பொது செயலாளர் டி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 98-வது பிறந்தநாள் விழா நாளை (9-ந் தேதி) சென்னையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பிறந்தநாள் விழாவில் முன்னாள் மாணவர் தலைவர் ஆர். அருண்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ஆர்.அபிராமி, மாநில அமைப்புச் செயலாளர் சுப.தமிழ்வேலன், வட சென்னை மாவட்ட செயலாளர் என்.துரைராஜ், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் டி.ஸ்ரீனிவாசன், தென்சென்னை மாவட்ட இணை செயலாளர் எஸ்.சிவராமன்,

தென் சென்னை மகளிர் அணி செயலாளர் ஜி.அமுதா, கரூர் மாவட்ட செயலாளர் ரா.பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.அழகிரிசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கே.குமார், நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.வெள்ளையன், தென்காசி மாவட்ட செயலாளர் டேனியல், ஜி.மீனாட்சி சுந்தரம், அ.அனந்தன், சேலம் மாவட்ட செயலாளர் கே.எம். ஆறுமுகம், அரியலூர் மாவட்ட செயலாளர் ஜி.மணிவேல், ஈரோடு மாவட்ட செயலாளர் வி.எல்.தங்கராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எம்.சக்திவேல், ஆர்.எம்.வீரப்பன் மக்கள் நற்பணி மன்ற பொருளாளர் அண்ணாதுரை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News