தமிழ்நாடு

சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

Published On 2024-02-19 08:28 GMT   |   Update On 2024-02-19 08:28 GMT
  • கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது.
  • தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் தமிழ் நூல்களை இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும். மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News