தமிழ்நாடு

119-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள் - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

Published On 2023-09-27 04:52 GMT   |   Update On 2023-09-27 06:33 GMT
  • சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை:

"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மகேஷ்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன்.

தி.மு.க. மாநில மகளிர் ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் விஜயகுமார், மோகன், தண்ட பாணி, ரகோத்தமன், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த்.

அ.தி.மு.க. நிர்வாகி டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் ஜீவன், வந்தியதேவன், சுப்பிரமணி, மகேந்திரன், சிக்கந்தர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நிர்வாகிகள் வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், முனவர் பாஷா, சென்னை நந்து, ஜி.ஆர்.வெங்கடேஷ்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், டேவிட், சீனிவாசன், ராஜேஷ், சாமுவேல், சுடலைமணி, தாஸ், சதீஷ், தங்கராஜ், வேல்முருகன், சண்முகசுந்தரம்.

அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், பொருளாளர் சிவா.

சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ராபர்ட், அருண், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கல்விக்குழு உறுப்பினர் செல்வகுமார், ராயபுரம் தொகுதி உறுப்பினர் பூலோக பாண்டியன், சென்னை வாழ் வத்திராயிருப்பு நாடார் உறவின் முறை சங்க தலைவர் வி.வி.எம்.கோகுல்ராம், செயலாளர் காசிராஜன், பொருளாளர் ஆதிமூலம், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல் ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, சென்னை மாவட்ட தலைவர் கே.ரங்கன், செயலாளர் சந்திரமோகன், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின் முறை மகமை தருமபண்டு தலைவர் சந்திரமோகன், செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் பாலசுப்பிரமணிய நாடார், மகாஜன பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் மணலி தங்கம்,

தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், தலைமை நிர்வாக செயலாளர் பொன்ராஜ், ஊடகப்பிரிவு தலைவர் தாமோதரன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுதந்திரதாஸ், கள்ளிக்குளம் நாடார் சங்க தலைவர் தங்கத்துரை, தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் சிவஜோதி, அமைப்பாளர் முருகன், பொருளாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் மெல்வின், இணை செயலாளர் டெல்லி வெங்கடேஷ், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை பொருளாளர் செல்வராஜ், துணை செயலாளர்கள் சுரேஷ், செந்தில், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், துணை தலைவர் காமராஜ், தங்கத்துரை, செல்வகுமார், மாடசாமி, இளைஞரணி தலைவர் ராமராஜன், செயலாளர் மாரிமுத்து, கணேஷ்குமார், ஜான்சன்,

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் எம்.மாரிதங்கம், மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்பாண்டியன், துணை செயலாளர் பாண்டியன், வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட்,

தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், துணை பொதுச் செயலாளர் பாலமுனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, கணேசா மற்றும் வக்கீல் ஆறுமுகநயினார், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் டி.முல்லைராஜா, திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் அணியாப்பூர் செல்வம், அமைப்பாளர் மணலி ராஜ கோபால், சந்தைப்பேட்டை நற்பணி மன்ற செயலாளர் காமராஜ், சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் நாகராஜன், ஆர்.கே.நகர் மன்ற செயலாளர் திராவிட சக்கரவர்த்தி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த ஆர்.பால முருகன், கணபதி, பாலம் இருளப்பன், பெஞ்சமின், ராகவன், தியாகராஜன், விமல், தங்கராஜ், எட்வின், ஆதிசங்கர், ஆன்டோ, ஜெபஸ்டின், எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News