தமிழ்நாடு

நடிகர் அஜித் மாணவர் ரித்விக்கை நேரில் அழைத்து வாழ்த்தினார்.


மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம்- நடிகர் அஜித்தை கவர்ந்த மதுரை மாணவர்

Published On 2022-07-28 07:03 GMT   |   Update On 2022-07-28 07:03 GMT
  • மதுரையை சேர்ந்த டால்பின் அசோக்-சுகந்தி தம்பதியரின் மகன் ரித்விக் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார்.
  • நடிகர் அஜித்தின் வாழ்த்துக்களை பெற்ற மாணவர் மகிழ்ச்சி அடைந்தார்.

மதுரை:

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் துப்பாக்கி சூடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

துப்பாக்கி சுடுவதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்தும் நேற்று நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். அதுபோல நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் அதிக மதிப்பெண்களை பெற்ற வீரர் வீராங்கனைகளை நடிகர் அஜித் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த டால்பின் அசோக்-சுகந்தி தம்பதியரின் மகன் ரித்விக் (வயது 12) 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார். அவர் 400-க்கு 363 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றார். அவரது சாதுரியத்தை பாராட்டி நடிகர் அஜித் மாணவர் ரித்விக்கை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

அப்போது, "வருங்காலங்களில் துப்பாக்கி சுடுவதில் தலைசிறந்து விளங்க வாழ்த்துக்கள்" என்று கூறிய அஜித் மாணவர் ரித்விக்குக்கு சிறப்பான எதிர்காலம் உனக்கு உள்ளது என்றும் கூறினார். நடிகர் அஜித்தின் வாழ்த்துக்களை பெற்ற மாணவர் மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மாணவர் ரித்விக் கூறுகையில், சிறுவயதில் இருந்து துப்பாக்கி சூடும் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன். திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் சாதனை படைத்து நடிகர் அஜித்தின் பாராட்டை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற தைரியத்தையும் ஏற்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News