தமிழ்நாடு

ரெயிலில் முன்பதிவு டிக்கெட் இன்றி பயணித்த 115 வடமாநில தொழிலாளர்கள்- நடுவழியில் போலீசார் இறக்கி விட்டனர்

Published On 2023-02-13 06:45 GMT   |   Update On 2023-02-13 06:45 GMT
  • கேரள மாநிலம்‌ எர்‌ணாகுளத்தில்‌ இருந்து ஜார்க்கண்ட்‌ மாநிலம்‌ டாட்டா நகருக்கு எக்ஸ்‌பிரஸ்‌ ரெயில்‌ புறப்பட்டு ஈரோடு மாவட்டம் வழியாக வந்‌தது.
  • ஜார்க்கண்ட்‌ தொழிலாளர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர்‌.

சேலம்:

தமிழ்நாடு, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளை உறிய டிக்கெட் இன்றி தொழிலாளர்கள் ஆக்கிரமித்து பயணிக்கின்றனர்.

இதனால், முறையாக முன்பதிவு டிக்கெட் எடுத்துச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் சென்னையில் வட மாநிலம் சென்ற ரெயிலில் டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநில தொழிலாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோரை ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார் நடுவழியில் இறக்கி விட்டனர். அப்படியொரு சம்பவம் நேற்று சேலம் அருகே தின்னப்பட்டி ரெயில்வே நிலையத்தில் நடந்தது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு ஈரோடு மாவட்டம் வழியாக வந்தது.

இந்த ரெயில், சேலம் ரெயில்வே நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு வந்தடைந்தது. 5 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அந்த நேரத்தில் ரெயிலின் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளான எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் டிக்கெட் இன்றி ஏராளமான ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் பயணித்தனர்.

அதனால் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்தவர்கள் போதிய இடவசதி இன்றி பெரும் அவதி அடைந்தனர். இது பற்றி சேலம் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ரதீஷ்பாபு தலைமையில் சேலம் ரெயில்வே நிலைய ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் ஸ்மித், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த ரெயிலை தின்னப்பட்டியில் நிறுத்தி, ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றியும், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்துக் கொண்டும் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜார்க்கண்ட் தொழிலாளர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர். இதில், 25 பெண்கள், 90 ஆண்கள் என 112 பேர் ஆவார்கள்.

இவர்களை அடுத்து வரும் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி, மாலை 6.40 மணிக்கு தின்னப்பட்டி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரசில் 112 பேரையும் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால், அந்த ரெயில் 4.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

Tags:    

Similar News