தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பு

Published On 2022-12-10 05:32 GMT   |   Update On 2022-12-10 07:49 GMT
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 தற்காலிக நிவாரண முகாம்களில் 1560 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சென்னை:

மாண்டஸ் புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

சென்னையில் மாநகராட்சி சார்பில் 5 முகாம்களில் 318 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புதுமனை குப்பம்பள்ளி, ஏழுகிணறு, செயின்ட் சேவியர் பள்ளி, சி.எம்.எஸ். சாலை விநாயகர் கோவில், அறிஞர் அண்ணா பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல் இன்று வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 தற்காலிக நிவாரண முகாம்களில் 1560 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 860 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடுகலுர், அலம்பறை குப்பம், கானாத்தூர், மடையம்பாக்கம், கோட்டைகாடு, மாமல்லபுரம் கொக்கில மேடு, புளிக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 16 சிறப்பு முகாம்களில் 367 பேர் தங்கி உள்ளனர். மொத்தம் சுமார் 3600 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News