தமிழ்நாடு

ஒரே வீட்டில் பிடிபட்ட 6 கொம்பேறி மூக்கன் பாம்புகள்

Published On 2023-03-10 06:05 GMT   |   Update On 2023-03-10 06:05 GMT
  • வீட்டின் முகப்பு ஓட்டில் பாம்பு ஒன்று தெரிவதை கண்ட நம்பிராஜன் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
  • தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி வீட்டில் இருந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகளை பிடித்தனர்.

சின்னாளபட்டி:

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி அம்பாத்துறை ஊராட்சி காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலரான இவர் ஓடுகள் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் முகப்பு ஓட்டில் பாம்பு ஒன்று தெரிவதை கண்ட நம்பிராஜன் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நிலைய அலுவலர் புனித் ராஜ் மற்றும் முதன்மை தீயணைப்பு வீரர்களான அழகேசன், சோலைராஜ் மற்றும் பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து ஓடுகளுக்குள் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் அருகிலேயே மற்றொரு பாம்பும் இருந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக வீடு முழுவதும் ஓடுகளுடைய விரிசல்களில் ஆங்காங்கே பாம்புகள் தென்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி வீட்டில் இருந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகளை பிடித்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்தவர்களும், அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News