தமிழ்நாடு
சஸ்பெண்ட் விவகாரம்... உண்ணாவிரதம் மேற்கொள்ள அ.தி.மு.க. திட்டம்
- நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்களை நடத்தி வந்த அ.தி.மு.க. நேற்று கவர்னரை சந்தித்து மனு அளித்தது. மேலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளச்சாராயம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.