தமிழ்நாடு (Tamil Nadu)

ஒட்டன்சத்திரம் அருகே வாடிக்கையாளர்களை கவர ஒட்டக சவாரி

Published On 2023-01-17 10:15 GMT   |   Update On 2023-01-17 10:15 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டையில் தனியார் உணவு விடுதி உள்ளது.
  • சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை இந்த ஒட்டக சவாரி வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன்கோட்டையில் தனியார் உணவு விடுதி உள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர ராஜஸ்தானில் இருந்து 2 ஒட்டகங்களை வாங்கி வைத்துள்ளார்.

கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஒட்டகங்களை பார்த்து அவ்வழியே கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடைக்கு வந்து உணவு அருந்தி செல்கின்றனர். பின்னர் அவர்கள் இளைப்பாறு தலுக்காக ஒட்டகத்தில் ஏறி சிறிது தூரம் சவாரி செய்து மகிழ்கின்றனர்.

மேலும் ஒட்டகப்பாலும் விற்பனை செய்து வருகிறார். தற்போது இந்தசாலையில் பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் செல்கின்றனர். மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிக அளவு சென்று வருகின்றனர்.

இதுபோன்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை இந்த ஒட்டக சவாரி வெகுவாக கவர்ந்துள்ளது. ஒட்டகம் மட்டுமின்றி இவரது உணவு விடுதியின் அருகே ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடா, கட்டு சேவல் போன்றவையும் வளர்த்து பராமரித்து வருகிறார்.

இதுபோன்ற வித்தியாசமான விலங்குகள் மீது ஆர்வம் கொண்டு ள்ளதால் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்தும் அதன் முன்பு செல்பி எடுத்தும்மகிழ்ந்து செல்கின்றனர்.

மேலும் மருத்துவ குணம் கொண்ட ஒட்டகப்பாலை ஆர்டர் கொடுத்து பலர் வாங்கி செல்கின்றனர். இதனால் ஒருமுறை இந்த கடைக்கு வருபவர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News