தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி அருகே வந்தபோது என்ஜின் பழுதானது- சென்னை ரெயில் நடுவழியில் நிறுத்தம்

Published On 2023-06-13 08:30 GMT   |   Update On 2023-06-13 08:31 GMT
  • கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது
  • ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர்.

பொன்னேரி:

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது.காலை 7.40 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பயணிகள் ரெயில் கவரப்பேட்டை அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.

ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர். பின்னர் காலை 8.45 மணியளவில் அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வந்த ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News