தமிழ்நாடு

அ.தி.மு.க. ஆட்சியில் தீரன் சின்னமலை கல்லூரிக்கு நிலம் ஒதுக்கவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2023-11-29 05:14 GMT   |   Update On 2023-11-29 05:14 GMT
  • தீரன் சின்னமலையின் பெயரை சொன்னால் தற்போதும் எழுச்சி ஏற்படும்.
  • கல்லூரி கட்டுவதற்கான தடையை தி.மு.க. அரசு நீக்கியது.

சென்னை:

சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில், தீரன் சின்னமலை மகளிர் கலை கல்லூரியின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

தீரன் சின்னமலையின் பெயரை சொன்னால் தற்போதும் எழுச்சி ஏற்படும். தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் 9 அமைச்சர்கள் இருந்தும் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கப்படவில்லை. கல்லூரி கட்டுவதற்கான தடையை தி.மு.க. அரசு நீக்கியது. தி.மு.க. ஆட்சியில் தான் இந்த பகுதியில் 2 மகளிர் கல்லூரிகள் வந்துள்ளன.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நேரில் வர இயலவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News