null
புதுவையில் எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிப்பு- தூதரகத்தில் பரபரப்பு புகார்
- புதுவை கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.
- விஜய் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் எனது மாமா செல்வமணி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் லாஸ்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு வாடகைக்கு சென்றார். ஆனால் அவர் சரியாக வாடகை செலுத்தாததால் வீட்டை காலி செய்யும்படி கூறியும், அவர் காலி செய்யவில்லை.
இதற்கிடையே விஜய் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்சிறையில் இருந்து வெளியே வந்த விஜய், ரவுடிகள் மூலம் அந்த வீட்டை அபகரித்துக் கொண்டார். மேலும் ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்
இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தும், அதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை .
2 எம்.எல்.ஏ.க்கள் தூண்டுதலின்பேரில் போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் புதுவை அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.