தமிழ்நாடு

சங்கரன்கோவில் ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியில் கிடந்த பல்லி- வாடிக்கையாளர் அதிர்ச்சி

Published On 2023-05-28 05:19 GMT   |   Update On 2023-05-28 05:19 GMT
  • சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை.
  • தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெல்லை-ராஜபாளையம் சாலையில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று சங்கரன்கோவிலை சேர்ந்த ஒருவர் அங்கு சிக்கன் வாங்கி சென்றுள்ளார். பின்னர் அதனை உண்ணும் போது சிக்கன் கிரேவி உள்ளே பல்லி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டால் மாவட்டம் முழுவதும் நான் சோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் தனக்கு நேரமில்லை என கூறுகிறார். எனவே சங்கரன்கோவில் நகருக்கு என தனி உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்.

மேலும் பிரபல உணவங்களுக்கு அதிகாரி செல்லும் தகவல் முன்கூட்டியே உணவகத்திற்கு தெரிந்து விடுவதால் எந்தவித சோதனையிலும் அவர்கள் பிடிபடுவதில்லை. தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தரமற்ற, கலப்பட உணவு பற்றிய புகார்களுக்கு புகார் செய்ய புதிய இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News