தமிழ்நாடு

கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

Published On 2023-04-28 10:37 GMT   |   Update On 2023-04-28 10:37 GMT
  • போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தினார்.
  • காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:

தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை போலீஸ் நிலையங்களை திடீரென ஆய்வு மேற்கொண்டார். நித்ராவிளை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் ராஜீவை பாராட்டி வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து பணியில் இருந்த போலீஸாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய சுற்றுப்புறங்களை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதை பார்வையிட்டார். அப்போது போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் தங்கும் விடுதி அமைக்கலாம் என்ற ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கொலங்கோடு காவல் நிலையம் சென்று காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு வரவேற்பு புத்தகத்தை ஆய்வு செய்தார்.

அப்போது கோப்புகளை சரியாக பராமரிப்பு செய்ததற்காக கொல்லங்கோடு காவல் நிலைய எழுத்தர் ஜஸ்டின் தேவ அருள்தாஸ்க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பட்டாலியன் பிரிவையும் ஆய்வு செய்தார் தொடர்ந்து பட்டாலியன் பிரிவு போலீசாரின் குறைகளையும் கேட்டு அறிந்தார். அவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News