தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் 22 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

Published On 2022-10-25 04:01 GMT   |   Update On 2022-10-25 04:01 GMT
  • பிராந்தி, ரம் போன்ற மதுவகைகளை காட்டிலும் பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
  • டாஸ்மாக் கடைகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை வருமானம் கிடைத்துள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ.3 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இருமடங்கு உயரும்.

அதன்படி தீபாவளியையொட்டி இந்த கடைகளில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதுபானங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில மது பிரியர்கள் 5 மதுபாட்டில்களை வரை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் வழக்கத்தை விட 2 மடங்கு விற்பனை அதிகரித்தது. பிராந்தி, ரம் போன்ற மதுவகைகளை காட்டிலும் பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை வருமானம் கிடைத்துள்ளது.

இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது, டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக ஒரு நாளைக்கு 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும். தற்போது தீபாவளியையொட்டி கடந்த 23, 24-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.22 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது என்றனர்.

Tags:    

Similar News