தாங்கள் கொண்டுவந்த திட்டத்துக்கு எதிராக போராடும் ஒரே கட்சி தி.மு.க. - நத்தம் விசுவநாதன் கிண்டல்
- தி.மு.க. எதிர்த்து இருந்தால் நீட் வந்திருக்காது.
- ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிேலயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.
ஆட்சியில் இருக்கும் போது ஒரு திட்டத்தை கொண்டு வருவதும், அதன் பிறகு அதே திட்டத்தை எதிர்ப்பதும் இந்தியாவில் தி.மு.க.வால் மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அந்த கட்சியை பார்த்து நாடே சிரிக்கிறது என்றார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.
தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வுக்கான மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போதே தி.மு.க. எதிர்த்து இருந்தால் நீட் வந்திருக்காது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வேறு வழியில்லாமல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.
மசோதா வரும்போது விட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் தங்களுக்கு தெரியும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது பயிற்சி வகுப்புகளையும் ரத்து செய்து விட்டு போராடுகிறார்கள்.
அதேபோல்தான் கச்சத்தீவையும் எழுதி கொடுத்து விட்டு இலங்கையிடம் இருந்து திருப்பி வாங்குங்கள் என்று போராடுகிறார்கள். இவை எதுவும் நடக்காது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிேலயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.