குடும்ப பிரச்சினை காரணமாக ரேஷன் கார்டில் இருந்து மாணவி பெயர் நீக்கம்- சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு
- கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.
- பள்ளி மாணவி தந்தை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் அக்ரமங்கலம் சிறுகாலூரை சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி பள்ளி சீருடையுடன் தனது தாயுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நான் எனது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றன. தற்போது 12-ம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு மேற்கொள்ள உள்ளேன். இந்த நிலையில் எனது தந்தை மற்றும் தாய்க்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாய் மற்றும் எனது பெயரை ரேஷன் கார்டில் இருந்து தந்தை நீக்கிவிட்டார். இதன் காரணமாக மேற்படிப்பு படிக்க வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் பெற முடியவில்லை .ஆகையால் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டில் எனது பெயரை சேர்த்து சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பள்ளி மாணவி தந்தை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.