தமிழ்நாடு

சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார்- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Published On 2022-10-18 06:08 GMT   |   Update On 2022-10-18 10:48 GMT
  • திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
  • திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேற்றி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அவையில் பங்கேற் அதிமுகவினருக்கு ஒரு நாள் முழுக்க தடை விதித்தார்.

இந்நிலையில், வெளியேறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார். சட்டசபை வேறு கட்சி வேறு. 62 அதிமுக எம்எல்ஏக்களால் எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டவர். ஆர்.பி.உதயகுமார் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவிகளுக்காக முன்பே கடிதம் கொடுக்கப்பட்டது

ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பே உள்ள நிலையில் அதை சபாநாயகர் மதிக்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சியாக உள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்பதுதான் மரபு.

நேற்று வரை சரியான முடிவு எடுக்காமல் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.

எங்களது கருத்துகளை நியாயமாக தெரிவித்தும் சபாநாயகர் எங்களுக்கு முறையான பதில் கூறவில்லை.

திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்துதான் சட்டசபை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொள்ளைபுறம் மூலமாக பழிவாங்குகிறார்.

திமுகவின் ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News