தமிழ்நாடு

மீண்டும் உயரத் தொடங்கியது தங்கம் விலை- சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு

Published On 2023-03-13 05:49 GMT   |   Update On 2023-03-13 07:12 GMT
  • கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,520 ஆக உயர்ந்தது.
  • நேற்று முன்தினம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற-இறக்கமாக காணப்படுகிறது. சில வாரம் திடீரென்று உயர்வதும், சில வாரம் திடீரென்று குறைவதுமாக மாறி மாறி நிகழ்ந்து வருகிறது.

கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து வந்தது. கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் மறுநாள் ரூ.41,800 ஆக குறைந்தது. 8-ந்தேதி அது ரூ.41,320 ஆகவும், 9-ந்தேதி ரூ.41,240 ஆகவும் குறைந்தது.

அதன் பிறகு கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,520 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று ரூ.42,160-க்கு விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையே நீடித்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது.

நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,270-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்படுகிறது.

இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News