தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்- கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Published On 2023-09-02 06:27 GMT   |   Update On 2023-09-02 06:27 GMT
  • தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார்.
  • நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.

ஈரோடு:

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜார்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரை வழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடையும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்து ஒங்கவும், முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும்.

தமிழகத்தில் தவறு செய்து கொண்டிருப்பவர்களை கவர்னர் கேட்கிறார். இந்த கவர்னரை போன்று இதுவரை தமிழகத்திற்கு கவர்னர் கிடைக்கவில்லை. நீட் தேர்வு மாற்றி அமைக்க வேண்டும் என தி.மு.க. விரும்பினால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டுமே தவிர கவர்னர் மீது குறை சொல்லக்கூடாது.

தமிழக அரசு எந்த மசோதாவை அனுப்பினாலும் கவர்னர் நிறைவேற்ற வேண்டும் என்பதில்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட தான் இருந்தால் மட்டுமே கவர்னர் ஒப்புதல் தருவார்.

இந்திய தண்டனை சட்டத்தின் பெயருக்கு எவ்வளவு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களோ அந்த அளவிற்கு ஆதரவும் உள்ளது. மேலும் நாட்டின் ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News