TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
- 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
- வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
சென்னை:
யூடியூபர் டி.டி.எப். வாசன் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வாரங்களுக்கு தினமும் காவல் நிலையத்தில் டி.டி.எப். வாசன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.