இந்த ஆண்டில் 500 மணி நேரத்தை ஓடவும், நடக்கவும் ஒதுக்கீடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் புத்தாண்டு உறுதியேற்பு
- உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர் தினமும் ஓட்டம் மற்றும் நடைபயிற்சிகள் செய்ய தவறுவது இல்லை.
- 140-க்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை:
புத்தாண்டில் ஒவ்வொரு வரும் ஏதாவது ஒரு சபதம் எடுத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த 2023 புத்தாண்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வித்தியாசமான உறுதி மொழியை ஏற்றுள்ளாார்.
உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர் தினமும் ஓட்டம் மற்றும் நடைபயிற்சிகள் செய்ய தவறுவது இல்லை. 140-க்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டை இளைஞர்களிடையே உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளும் வகையிலும் ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட நேரத்தை ஓட்டம் மற்றும் நடைபயிற்சிக்காக ஒதுக்குகிறார்.
ஆண்டுக்கு 365 நாட்கள். தினமும் 24 மணி வீதம் மொத்தம் 8 ஆயிரத்து 760 மணி நேரம் உள்ளது. இதில் 500 மணி நேரத்தை ஓடுவதற்கும், நடப்பதற்குமாக ஒதுக்க முடிவு செய்த உறுதியேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.