தமிழ்நாடு

குரங்கு அம்மை வைரஸ் எதிரொலி- சேலம் விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வருவோர் கண்காணிப்பு

Published On 2022-07-29 08:13 GMT   |   Update On 2022-07-29 08:13 GMT
  • உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

சேலம்:

உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கேரளா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை தொற்று உறுதியானதால் மாநில எல்லைகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கவும் விமான நிலையங்களில் சுகாதார துறையினர் முகாமிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. இருப்பினும் சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சேலம் விமான நிலையத்தில் பரிசோதனக்கு பிறகே பயணிகள் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News