சிறுவன் பாலமணிகண்டன் கொலை விவகாரம்- காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம்
- சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
- ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலம ணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்து வமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் சிறுவன் உயிரிழக்கவில்லை என்று மருத்துவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனால், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.