பாலாற்றின் குறுக்கே தடுப்பணை- துரைமுருகன் கண்டனம்
- நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
- தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என ஆந்திரா அரசு கூறியிருந்த நிலையில், எந்த விழாவும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு 315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:-
பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.
1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும் என்று கூறியுள்ளார்.