தமிழ்நாடு

தமிழக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்

Published On 2022-08-03 03:45 GMT   |   Update On 2022-08-03 03:45 GMT
  • முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது.
  • தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம்.

வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது.

தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். திருச்சி- சென்னை, ஓசூர்- சென்னைக்கு 80 கிலோ பார்சல் வரை 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.210 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் பார்சலுக்கு மதுரை- சென்னைக்கு ரூ.300, கோவை- சென்னைக்கு ரூ.330 எனவும், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பார்சல் கட்டணம் ரூ.390 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News