தமிழ்நாடு

'ஆங்கிலம் தெரியாதவர்கள் முட்டாள்கள் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்'- ஸ்ரீதர் வேம்பு கருத்து

Published On 2023-04-07 07:58 GMT   |   Update On 2023-04-07 11:26 GMT
  • ஆங்கில மோகத்தில் இருந்து விடுபடும்போதுதான் நாம் முன்னேற்றத்தை காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
  • தனது சோஹோ நிறுவனத்தில் சரளமாக ஆங்கிலம் பேசுவதை வைத்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில்லை.

தென்காசி:

அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்மா சர்வா ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கிருந்த வரவேற்பாளர்கள் கருத்து பகிரப்படும் புத்தகத்தில் எழுதினார்.

அப்போது ஆங்கிலம் தெரியாமல் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருந்த உரையை பார்த்து எழுதிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் ஏராளமானோர் அவரை சமூக வலைதளங்கள் வாயிலாக கேலி செய்தனர்.

அதனைத்தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, நான் அசாமில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்று ஆங்கிலம் மற்றும் இந்தியை எழுத, படிக்க கற்றுக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு ஆங்கிலம், இந்தி தெரியாதது பற்றி எவ்வித தயக்கமும் இல்லை என டுவிட் செய்துள்ளார்.

இந்நிலையில் அசாம் முதல்-மந்திரியின் டுவிட்டை குறிப்பிட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில், ஆங்கிலத்தை சரளமாக பேசவோ, படிக்கவோ, எழுதவோ தெரியாதவர்கள் முட்டாள்கள் என்ற நிலைப்பாடு இந்தியாவில் உள்ள 'எலைட்' பிரிவு மேல்தட்டு சமூகத்தில் உள்ளது. இந்த ஆங்கில மோகத்தில் இருந்து விடுபடும்போதுதான் நாம் முன்னேற்றத்தை காணமுடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சோஹோ நிறுவனத்தில் சரளமாக ஆங்கிலம் பேசுவதை வைத்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News