தமிழ்நாடு (Tamil Nadu)

காவிரி பிரச்சனைக்காக உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : பிரேமலதா

Published On 2023-10-02 07:50 GMT   |   Update On 2023-10-02 07:50 GMT
  • காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.
  • தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள்.

சென்னை:

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சனையில் 55 ஆண்டுகளாக கண் துடைப்பு நாடகம் தான் நடக்கிறது.

தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரையும் கர்நாடக அரசு கொடுக்கவில்லை. அந்த மாநில அரசும், அங்குள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுகின்றன.

தமிழகத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து போராடும் சூழலை உருவாக்காதது ஏன்? உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. சோனியா மூலம் அந்த மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பது நதிகளை இணைப்பதுதான். இதுபற்றி கவர்னரை சந்தித்தபோதும் வற்புறுத்தினோம்.

தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்க போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News