தமிழ்நாடு

விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் மறியல்

Published On 2023-08-11 08:23 GMT   |   Update On 2023-08-11 08:23 GMT
  • விபத்து நடந்த இடத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
  • விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பொத்தேரியில் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த பலியானவர்களின் உடல்களை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்த இடத்தில் திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, சாலையை கடக்கும் இடத்தில் சிக்னல் அமைக்க வேண்டும், காலை, மாலை நேரத்தில் அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும், மீண்டும் இது போல் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்தை நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News