தமிழ்நாடு

சென்னையில் மழை... சில்லென்று மாறிய வானிலை

Published On 2024-09-25 12:37 GMT   |   Update On 2024-09-25 12:37 GMT
  • காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை.
  • மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அடையாறு, வடபழனி, கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதே போல், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக நகரின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News