வைகை அணை தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை- பா.ஜெயபெருமாள் உறுதி
- நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது.
- தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு சாயல்குடி பகுதியில் பூப்பாண்டியபுரம், பிள்ளையார்குளம், நோம்பகுளம், எஸ்.கீரந்தை, காணிக்கூர், கீழசெல்வனூர், பன்னந்தை மேல சிறு போது, இளஞ்செம்பூர் பூக்குளம், ஒருவானேந்தல், தேவர்குறிச்சி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சாதாரண விவசாயி. இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கிராம மக்கள் குடிப்பதற்கே போதுமான குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. வைகை தண்ணீரை கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் தாலுகா விவசாயத்திற்கு திறந்துவிட நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைநீர் கடலில் வீணாக கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. அரசு கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்களுக்கு கிராமங்களிலேயே தொழில் செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கிராமங்களில் இரட்டை இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. தாய்மார்களிடையேட இரட்ரை இலைக்கு அதிக மவுசு, இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று பேசினார்.
அப்போது பெண்கள் குலவையிட்டு எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என கோஷமிட்டனர். அதிமுக வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமியாண்டியன், கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், சாயல்குடி ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.அந்தோணிராஜ், தனிச்சியம் ராஜேந்திரன், சிக்கல் பிரவீன், தேமுதிக, மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.