தமிழ்நாடு

ரவுடிகள் அட்டகாசத்தை கண்டித்து பொன்னேரியில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Published On 2023-07-25 08:30 GMT   |   Update On 2023-07-25 08:57 GMT
  • பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
  • பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

பொன்னேரி:

பொன்னேரியில் வியாபாரிகள் தொடர்ந்து ரவுடிகளால் தாக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது.மேலும் கடைகளை குறிவைத்து கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் சம்பவங்களும் நீடித்து வருகின்றன.

இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை போலீசில் புகார் செய்தும் ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளை ரவுடி கும்பல் மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது. இதனால் பொன்னேரி பகுதியில் வியாபாரிகளும், பொது மக்களும் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், வியாபாரிகளை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க என்று கூறி பொன்னேரியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று பொன்னேரி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பொன்னேரியி சுற்று வட்டார பகுதியில் உள்ள வேண்பாக்கம் திருவாயர்பாடி, பொன்னேரி பஜார் வீதிஉட்பட இடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் பொன்னேரி அண்ணாசிலை அருகே நடைபெற்றது. அப்போது, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்கவும் போலீசார் ரோந்துவரவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பொதுச் செயலாளர் அப்துல் காதர் பொருளாளர் பிரகாஷ் சர்மா உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News