10-ம் வகுப்பு தேர்வில் வேலூர் கடைசி இடம்
- 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
- வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 9104 மாணவர்கள் 9253 மாணவிகள் என 18,357 தேர்வு எழுதினர். இதில் 6885 மாணவர்கள் 8181 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 66 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மிக குறைந்த தேர்ச்சியால் வேலூர் மாவட்டம் தமிழக அளவில் கடைசி இடத்தை பிடித்தது குறிப்பிட்டத்தக்கது.
இந்தத் தேர்வில் திருப்பத்தூர் மாநில அளவில் 31-வது இடத்தை பிடித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்துக்கு முன்னதாக 37-வது இடத்தைப் பிடித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.10 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் 36-வது இடத்தைப்பிடித்துள்ளது.