தமிழ்நாடு

தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்- தமிமுன் அன்சாரி

Published On 2024-02-11 06:32 GMT   |   Update On 2024-02-11 06:32 GMT
  • பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
  • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஓசூர்:

ஓசூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் ஆகியோர் இன்னும் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை விடுவித்து, அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சென்று நிம்மதியாக வாழ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேசி தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News