தமிழ்நாடு

கோவை அருகே கியாஸ் லாரியில் இருந்து கியாஸ் கசிந்ததால் பரபரப்பு

Published On 2023-12-09 06:01 GMT   |   Update On 2023-12-09 06:01 GMT
  • மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
  • காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

குனியமுத்தூர்:

கோவை பாலக்காடு ரோடு திருமலையாம் பாளையம் பிரிவு அருகே கியாஸ் நிரப்பப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கக்கூடிய பார்க்கிங் பகுதி ஒன்று உள்ளது.

இங்கு எந்த நேரமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சற்று நேரம் இளைப்பாரி விட்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை லாரிகள் நிற்கும் பார்க்கிங் பகுதியில், பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் மலையில் இடிந்து விழுந்தது.

அதில் ஒரு செங்கல் கியாஸ், நிரப்பப்பட்ட லாரியின் வால்வு பகுதியில் விழுந்ததால், அந்த வால்வு உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் கசிய ஆரம்பித்தது.

இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சற்று அச்சம் அடைந்தனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கியாஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கியாஸ் கசிவை நிறுத்தி சீராக்கினார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இது மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இல்லை என்றால் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

இதுதவிர கியாஸ் கசிவு காரணமாக ஒருவேளை தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News