தமிழ்நாடு

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் விவரம் சேகரிப்பு

Published On 2023-02-14 04:39 GMT   |   Update On 2023-02-14 04:39 GMT
  • திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
  • வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

வேலூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10-வது தெரு, திருவண்ணாமலை தேனி மலை பகுதி, திருவண்ணாமலை-வேலூர் சாலை, கலசப்பாக்கம், போளுர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்து அதிலிருந்த ரூ.75 லட்சத்தை நேற்று முன்தினம் கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி.க்கள் கார்த்திகேயன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகள், மாவட்ட, மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை எதிரொலியாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதில் காவலாளிகள் உள்ள ஏ.டி.எம். மையங்கள் எத்தனை உள்ளது? காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். மையங்கள் எத்தனை என இருபிரிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நகை அடகு கடை உள்ளிட்டவை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மேலும் விரைவில் ஏடிஎம் மையங்களில் உள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை நடத்த உள்ளார் என்றனர்.

Tags:    

Similar News