தமிழ்நாடு

102-வது நினைவு தினத்தையொட்டி எட்டயபுரத்தில், பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

Published On 2023-09-11 10:30 IST   |   Update On 2023-09-11 10:30:00 IST
  • மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
  • பாரதியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எட்டயபுரம்:

மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபம் மற்றும் அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் பாரதியார் மணிமண்டபம் மற்றும் அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜான் கிருஷ்ணழகன் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளில் மக்கள் தொடர்பு அதிகாரி பிரவின்குமார், எட்டயபுரம் தாசில்தார் மல்லிகா, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் உள்ளிட்டவர்கள் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி, எட்டயபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன், கிராம உதவியாளர் மாரியப்பன் உள்ளிட்டவர்களும் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags:    

Similar News