தமிழ்நாடு

கவர்னர் குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்- வைகோ

Published On 2023-05-06 08:11 GMT   |   Update On 2023-05-06 08:11 GMT
  • தி.மு.க. அரசின் இரண்டாண்டு ஆட்சி இதுவரை இருந்த ஆட்சிகளிலே சிறப்பு மிக்க ஆட்சியாக இருக்கிறது.
  • அனைத்து தரப்பு மக்களுடைய ஆவலை பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

சென்னை:

ம.தி.மு.க. கட்சி 30-வது ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூர் தாயகத்தில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனையோ ஏமாற்றங்கள், எத்தனையோ சோதனைகள், எத்தனையோ துரோகங்களை கடந்து இன்று 29 ஆண்டுகளை கடந்து 30-வது ஆண்டில் நிற்கிறது.

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி காலாவதியாகி போன ஒரு மனிதர். தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பாடுகள் முரண்பட்டவை ஆக உள்ளது. தமிழகம் பெரிய தலைவர்கள் மற்றும் எத்தனையோ சோதனைகள் கடந்து வளர்ந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் ரவி உளறிக்கொண்டிருக்கிறார்.

தி.மு.க. அரசின் இரண்டாண்டு ஆட்சி இதுவரை இருந்த ஆட்சிகளிலே சிறப்பு மிக்க ஆட்சியாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுடைய ஆவலை பூர்த்தி செய்கின்ற ஆட்சியாக ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News