தமிழ்நாடு
சத்தியமங்கலம் வனசரகத்தில் வனவிலங்குகளின் கால் தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது

Published On 2022-06-27 05:57 GMT   |   Update On 2022-06-27 05:57 GMT
  • வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
  • அடுத்த 2 நாட்கள் மாமிச உண்ணிகளையும் கணக்கெடுத்து சென்னை வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்ப உள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கெட்டவாடி, கேர்மாளம், தலமலை, கடம்பூர், டி.என்.பாளையம் என 10 வனசரகங்கள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனசரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வருகின்ற 2-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

இதில் முதல் 2 நாட்கள் நேர்கோட்டு பாதையிலும், அடுத்த 2 நாட்கள் தாவர உண்ணிகளையும், அடுத்த 2 நாட்கள் மாமிச உண்ணிகளையும் கணக்கெடுத்து சென்னை வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்ப உள்ளனர்.

இதன் முதல் பகுதியாக இன்று காலை சத்தியமங்கலம் வன சரகத்தில் உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) யோகேஷ் குலால் தலைமையில் வனவர் தீபக்குமார் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய 6 பேர் கொண்ட குழு ரேடார் காம்பஸ், ஜி.பி.எஸ். கருவி போன்ற நவீன உபகரணங்களை கொண்டு பண்ணாரில் இருந்து தொடங்கி வன விலங்குகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News