தமிழ்நாடு

ராகுல் காந்தியும், ப.சிதம்பரமும் தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்

Published On 2024-04-05 05:55 GMT   |   Update On 2024-04-05 05:55 GMT
  • மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது.
  • இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை:

பா.ஜ.க மாநில தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை சூலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள், தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்று மத்திய அரசு பவர் டெக்ஸ் என்ற திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறியாளர்களுக்கு சோலார் தகடுகள் 50 சதவீத மானியத்தில் கொடுக்கப்பட்டு வந்தது.

2021-ம் ஆண்டு வரை இந்த திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை அப்போது இருந்த எம்.பிக்கள் யாரும் அவ்வளவு ஆர்வமாக செயல்படுத்தவில்லை. மத்திய அரசு திட்டம் கொடுத்தாலும் அதனை செயல்படுத்துவதில் சுணக்கம் இருந்து வருகிறது. இதுவரை இருந்த எம்.பிக்களை அதனை கண்டு கொள்வில்லை.

பா.ஜனதா வெற்றி பெற்றதும் 2024 முதல் 2026-ம் ஆண்டு வரை 2 ஆண்டுக்கு மீண்டும் பவர்டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.


சோமனூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். அம்ரூத் பாரத் திட்டத்தில் சோமனூர் ரெயில் நிலையத்தை இணைத்து, அதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

ப.சிதம்பரம் கூறுவது போல நாட்டில் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்படவில்லை. இளைஞர்கள் அனைவரும் வேலையில் தான் உள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

ப.சிதம்பரமும், அவரது தலைவருமான ராகுல் காந்தியும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனவே ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் உள்ளார் என குறிப்பிட்டு இருக்கலாம். அவர்கள் தான் வேலையில்லாமல் இந்தியா முழுவதும் சுற்றி வந்து பிரச்சனை செய்து வருகின்றனர். மற்றபடி இந்தியாவில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News