தமிழ்நாடு

பள்ளிக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி மாணவர்களை அழைத்து வரும் ஆசிரியர்- மலை கிராம மக்கள் பாராட்டு

Published On 2023-06-16 06:26 GMT   |   Update On 2023-06-16 06:26 GMT
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
  • பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.

குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.

பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.

பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.

இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

Tags:    

Similar News