தமிழ்நாடு

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு தீவிர கவனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-12-23 13:15 GMT   |   Update On 2023-12-23 13:15 GMT
  • 4 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் தலைமையில் மருத்துவ முகாம்.

தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்த 4 மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். 

அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News