தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

Published On 2023-03-23 04:53 GMT   |   Update On 2023-03-23 04:53 GMT
  • இன்றும், நாளையும் டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசின் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை:

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு ஏற்கனவே சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி கவர்னரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால் அதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் முதலில் சில விளக்கங்களை கேட்டிருந்தார்.

இந்த விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் விரிவான பதில் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் அதில் திருப்தி அடையாத கவர்னர் ஆர்.என்.ரவி அந்த சட்ட மசோதாவை இம்மாதம் முதல் வாரத்தில் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

அதில் இந்த சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலையில் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்றும், நாளையும் டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர், மத்திய அரசின் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கவர்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்றுள்ளார். அவரது நிகழ்ச்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை. நாளை இரவு அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News